
பா.ம.க. செயற்குழு கூட்டம்
திருச்சி,டிச.10-

திருச்சி மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு மற்றும் ஆய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் புத்தூரில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் மாநில வன்னியர் சங்க துணை தலைவர் கதிர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜான் ரஸ்கின், மாவட்ட அமைப்பு செயலாளர் கிள்ளிவளவன், மாவட்ட அமைப்பு தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொருளாளர் கவிஞர் திலக பாமா, நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து பேசினார். முன்னதாக புத்தூர் பகுதி செயலாளர் ஆ. செந்தில் குமார் வரவேற்றார். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
