
திருச்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
திருச்சி புத்தூர் ஒய்.எம்.சி.ஏ சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி ஒய். எம். சி. ஏ , டாக்டர் மோகன் நீரழிவு சிறப்பு மையம், வாசன் கண் மருத்துவமனை, ராயல் பேர்ல் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஒய்.எம்.சி.ஏ.,தலைவர் எர்னஸ்ட் ரவி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பர்னபாஸ், துணை தலைவர்கள் நோபல் ரிச்சர்ட், ரவிச்சந்திரன், பொருளாளர் ஜான்நிக்கல்டோஸ், நிர்வாக குழு உறுப்பினர் ராஜா முன்னிலை வகித்தனர்.
முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டன.
