
தந்தைக்கு அடி,உதை மகன் கைது
திருச்சி,டிச.10-
சொத்து கேட்டு தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

காட்டுப்புத்தூர் மேலப்புதூரை சேர்ந்தவர் சுப்பையன் (70) .
மனைவி செல்லம்மாள் மற்றும் மகன் கோபால் .
குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகனை பிரிந்து உடையாகுளம் புதூரில் உள்ள தனது அக்கா பெரியம்மாள் வீட்டில் சுப்பையன் வசித்து வருகிறார்.

அங்கே அடிக்கடி சென்று சொத்து கேட்டு மகன் கோபால் மற்றும் மனைவி செல்லம்மாள் தகராறு செய்தனர். சம்பவத்தன்று சொத்து கேட்டு சுப்பையனிடம் இருவரும் பிரச்னை செய்து ,அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார், தந்தையை தாக்கிய மகன் கோபாலை கைது செய்தனர்.
