
திருச்சி அருகே கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்
மணப்பாறை ஜி.ஹச்.சி.எல் அறக்கட்டளை, மீனாட்சி மில்ஸ் ,மற்றும் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மருத்துவ முகாம் சோலைபட்டியில் நடைபெற்றது.

முகாமை சீகம்பட்டி ஊராட்சி பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் பார்வதி முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் அமுதவல்லி செல்வராஜ் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மணப்பாறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
