
பொதுமக்களின் தேவைகளுக்கு பின்னரே ஆவின் நிலையத்துக்கு பால்!
பொதுமக்களின் தேவைகளுக்கு வழங்கப்பட்ட பிறகு ஆவின் பால் நிலையத்துக்கு பாலை அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கேட்டுக் கொண்டனர்.

மணப்பாறை கோவில்பட்டி சாலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் மற்றும் ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் போக்குவரத்து கழக பொது செயலாளர் சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், அனைத்து வார்டுகளிலும் உள்ள பொது மக்களுக்கும் பால் கார்டு இல்லாதவர்களுக்கும் தினசரி பால் விநியோகம் செய்ய வேண்டும். பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு ஆவின் நிலையங்களுக்கு பால் வழங்க வேண்டும் வலியுறுத்தி இருந்தனர்.
