திருச்சியில் ஆக்ரமிப்பு அகற்றும் பணியில் தள்ளு முள்ளு

திருச்சியில் ஆக்ரமிப்பு அகற்றும் பணியில் தள்ளு முள்ளு
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சாலைகளை அகலப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலக்கரை ரவுண்டானா முதல் மரக்கடை வரையான பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் வந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கடைகள் முன்புறம் போடப்பட்டிருந்த செட்டுகள் சாலை ஓரத்தில் இருந்த சிறு சிறு கடைகள் போன்றவை இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. வியாபாரிகள் எந்தவித முன் அறிவிப்பு இன்றி இடிப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனால் வியாபாரிகள் அதிகாரிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வியாபாரிகள் உதவி ஆணையர் அக்பர் அலி என்பவரை வேகமாக கீழே தள்ளி விட்டனர். இதனால் ஊழியர்கள் அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் இடையே கடுமையான வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் தலையிட்டு இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் இடித்து தள்ளப்பட்டன. இதனால் பாலக்கரை பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
