
பஸ்சில் அடிபட்டு மாணவன் பலி
மண்ணச்சநல்லூர் காளவாய்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் மகன் சாரதி ( 15). திருவெள்ளறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். சாரதி,அவரது அண்ணன் சுபாஷ் (29), அவரது நண்பர் சரத் (27) ஆகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திருவெள்ளறையில் இருந்து மண்ணச்சநல்லூர் புறப்பட்டனர்.

திருவெள்ளறை பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது , திருச்சியில் இருந்து துறையூர் நோக்கி சென்ற அரசு பஸ் , இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய சாரதி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்த தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சாரதியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
