
தேசிய கல்வி கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
தேசிய கல்வி கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், திருச்சியில் பிரசார இயக்கம் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்துக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் நீதிநாயகம் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் செந்தில்குமார்,மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜான் கென்னடி ,தமிழக ஆசிரியர் மன்ற மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ், கல்வி மாவட்ட செயலாளர் மணிவாசகம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பிரச்சார இயக்கத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு உறுப்பினர் சிற்றரசு நன்றி கூறினார்.
