
திருச்சியில் கைக்குழந்தை திடீர் மரணம்!
திருச்சி ஸ்ரீரங்கம் சாக்சீடு குழந்தைகள் காப்பகத்திற்கு திண்டுக்கல் குழந்தை நல கமிட்டி சார்பில் இரண்டு மாத குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு தீபா என பெயரிட்டனர்.

அக்குழந்தைக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி அக்குழந்தை இறந்தது.
சாக்ஸ்சீடு சமூக நல பணியாளர் சுகப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
