NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருட்டிலும் ஒரு நியாயம் வேணாமா…

0
1

திருட்டிலும் ஒரு நியாயம் வேணாமா…

நகை கடையில் கொள்ளை, ஏடிஎம் மையத்தில் திருட்டு,
வீடு புகுந்து திருட்டு என்றெல்லாம் படித்திருப்போம் பார்த்திருப்போம் ஆனால் கடைக்கு உள்ளே புகுந்து வெறும் சிகரெட்டு பாக்கெட்டுகளை மட்டும் திருடிய நவீன திருடனை பற்றி படித்து இருக்கிறீர்களா….

4

திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பரிதாபேகம் (50). பாலக்கரை காஜாபேட்டை மெயின் ரோட்டில் மளிகை கடை வைத்துள்ளார் .
இவர் வழக்கம்போல கடையை மூடி விட்டு காலையில் வந்த போது கடையின் பூட்டும் கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பரிதா பேகம் , பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வந்து கடை உரிமையாளரை அழைத்துக் கொண்டு கடைக்குள்ளே சென்று சோதனை செய்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த பணம் அப்படியே இருந்தது . இதர மளிகை பொருட்கள் அப்படியே இருந்தன. ஆனால் கோல்ட் பில்டர் சிகரெட் பாக்கெட்டுகள் மட்டும் மாயமாகி இருந்தன. கடுப்பான போலீசார் இந்த நூதன திருடர்களை தேடி வருகின்றனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.