
திருச்சியில் தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பு கூட்டம்
தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். தலைவர் அய்யப்பன் சிறப்புரையாற்றினார்.
தேவேந்திர குல வேளாளர் இன மக்களை எஸ். சி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முறையிட வேண்டும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி. மு. க கூட்டணியை தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு ஆதரித்தது. அப்போது அமைச்சர்கள் கே. என். நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரும் திருச்சி மாநகரில் தியாகி இம்மானுவேல் சேகரனார், சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் சுந்தரலிங்க தேவேந்திரர் திருஉருவ சிலைகள் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதிகளை விரைந்து
நிறைவேற்ற வேண்டும்.
திருச்சி மாநகரில் தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் எழுதப்பட்ட சுவர்எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களை கருப்பு மை அடித்து களங்கப்படுத்திய கயவர்களை இக்கூட்டம் வன்மையாக
கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் வேலை செய்ய, தொழில் செய்ய வருகின்ற அந்திய மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை, ரேசன் கார்டு உரிமை, நிலம் வாங்கும் உரிமை எதுவும் வழங்க கூடாது வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்பட சில தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
தொகுதி செயலாளர் பாவேந்தர், மாவட்ட பொறுப்பாளர் இளையராஜா,
பாலக்கரை பகுதி செயலாளர் ஜான்மாணிக்கம், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பிரதாப், ஒன்றிய செயலாளர்கள் விஜயராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
