
அரசலூர் ரேஷன் கடையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்!
தொட்டியம் வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ,குடும்பத் தலைவர் பெயர் மாற்றம், குடும்ப அட்டை வகை மாற்றம் ,முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, என 30 மனுக்கள் பெறப்பட்டன.
சிறப்பு வருவாய் ஆய்வாளர் லட்சுமணன் வரவேற்றார்.
விற்பனையாளர் மல்லிகா நன்றி கூறினார்.
