
திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
திருச்சி விமான நிலையத்தில் விமான விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.

விமானம் வரும்போது விபத்து ஏற்பட்டால் அதனை தடுக்கும் முறை குறித்து பாதுகாப்பு ஒத் திகை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஒத்திகையில் துப்பாக்கி தொழிற் சாலை, பாய்லர் தொழிற் சாலை, எச். ஏ. பி. பி. தொழிற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாக னங்கள் வரவழைக்கப்பட்டன.
திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் தனியார் மருத்துவ மனை ஊழியர்கள் பங்கேற்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், திருச்சி விமான நிலைய தீ தடுப்பு பிரிவுத்துறையினர் இணைந்து விபத்து தடுக்கும் முறை குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
