
திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை சிக்கிய கடைகளுக்கு சீல்!
திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள சில கடைகளில் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட பொருட்கள் கடையில் வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து இரண்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு.
தமிழ்நாடு உணவுபாதுகாப்பு ஆணையர் லால்வேனா உத்தரவின் அடிப்படையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் கடைகளுக்கு சீல் வைத்தனர்.
