
திருச்சியில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!
திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் பால சமுத்திரம் பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.
மாவட்டத் துணைத் தலைவர் காமராஜ், தொட்டியம் ஒன்றிய குழு துணை தலைவர் சத்தியமூர்த்தி, முன்னிலை வகித்தனர்.
இலக்கிய அணி மாநில செயலாளர் காட்டுப்புத்தூர் பிரபாகரன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். வட்டாரத் தலைவர்கள் நல்லேந்திரன், குணசேகரன், முசிறி சுரேஷ் ,சுகுமார், சண்முகம் பிள்ளை நகரத் தலைவர் சக்திவேல் மற்றும் திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.
