
திருச்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
திருச்சி மாவட்டம் துறையூர் சங்கம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கொட்டையூர் ஊராட்சி தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார்.

கால்நடை உதவி மருத்துவர்கள் தனலட்சுமி ,வடிவேல், மதி, கால்நடை உதவி ஆய்வாளர்கள் சுந்தரபாண்டியன், தர்மராஜன், சரவணன், கமலவேணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சஞ்சீவி, குமார், ஜீவிதா ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
