
திருச்சியில் சிறப்பு குறை தீர் கூட்டம்!
திருச்சி, முசிறி சரக காவல் துறை சார்பில் மனுக்கள் மீதான சிறப்பு தீர்வு முகாம் நடைபெற்றது.
முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் தலைமை வகித்தார்.
தொட்டியம் காவல் உதவி ஆய்வாளர் நல்லதம்பி,
சிறப்பு பயிற்சி உதவி ஆய்வாளர் பிரியா ஆகியோர், பெற்ற 8 மனுக்களில் 6 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

காட்டுப்புத்தூர் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் பெற்ற 3 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.
முசிறி காவல் நிலையம் சார்பாக உதவி ஆய்வாளர்கள் நாகராஜ், கருணாநிதி, சத்திவிநாயகம், தலைமை காவலர்கள் ஆனந்த், கவிதா, ஆகியோர் பெற்ற 22 மனுக்களுக்கு விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.

வருவாய்த்துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், சௌந்தர், குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
