
லாட்டரி, கஞ்சா 17 பேர் கைது
திருச்சி,டிச.12-

திருச்சி மாநகரில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாநகரின் சில பகுதிகளில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாகவும், சில பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளதாகவும் போலீசுக்கு தகவல்கள் கிடைத்தது. இதன் அடிப்படையில் மாநகர போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் குறித்து, துண்டு சீட்டில் எழுதி விற்றதாக அரியமங்கலத்தைச் சேர்ந்த ஹஜ்புதீன், பாத்திமா பீவி, மனோகர், தர்மராஜ், தியாக சுந்தரம், பாபு, ராபர்ட் அர்னால்ட், சண்முகம்,ஜாபர் அலி கான், முகமது அலி ஜின்னா ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் மில் காலனியைச் சேர்ந்த டாக்கர், ஜெயசீலன், சிந்தாமணி பாபு, இ.பி.ரோடு பாக்யராஜ், சிந்தாமணி செபஸ்டின், செல்வம், பாலக்கரை யேசு, முத்துக்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
