எழுத்தாளராக… பத்திரிகையாளராக…. மாற திருச்சி கல்லூரி மாணவா்களுக்கு அரிய வாய்ப்பு….
நம்ம திருச்சி மற்றும் வோ்கள் அறக்கட்டளை
தோழமையில்செயின்ட் ஜோசப் கல்லூரியில்
படைப்பாற்றல் பயிலரங்கம்
நம்ம திருச்சி, வேர்கள் அறக்கட்டளை மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை இணைந்து கல்லூரி மாணவா்களுக்கான படைப்பிலக்கியப் பயிலரங்கை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. தூய வளனார் கல்லூரியின் செயலா் அருள்முனைவா் கு.அமல் தலைமையில் இப்பயிலரங்கம் நடைபெறுகிறது.
பயிலரங்கின் தொடக்கவிழாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற படைப்பிலக்கியப் பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களின் படைப்புகள் அடங்கிய விதைநெல்-2022 என்னும் தொகுப்பைக் கல்லூரி முதல்வா் அருள்முனைவா் ம.ஆரோக்கியசாமி சேவியா் வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார்.

படைப்பாற்றல் பயிலரங்கம்
தமிழ்நாடு அரசின் சமூகநீதிப் பாதுகாப்புக் குழுவின் தலைவரும், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் ஆலோசகருமான பேராசிரியா் சுப.வீரபாண்டியன் இதழியல் துறையில் பல ஆண்டுகளாகச் சிறப்பாகப் பணியாற்றி வரும் திருச்சிராப்பள்ளி எழுத்தாளா்கள் ஸ்ரீரங்கம் கல்கி திருநாவுக்கரசு மற்றும் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோரைக் பாராட்டி விருது வழங்கிப் பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார்.
பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் முனைவா் ஆ.ஜோசப் சகாயராஜ் வரவேற்புரையாற்றுகிறார். தமிழாய்வுத்துறைத் தலைவா் முனைவா் ஞா.பெஸ்கி அறிமுகவுரையாற்றுகிறார். வேர்கள் அறக்கட்டளை நிறுவுநர் லயன் அடைக்கலராஜா, திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் திருமதி கேத்தரீன் ஆரோக்கியசாமி, தூய வளனார் கல்லூரி பணிமுறை இரண்டின் துணைமுதல்வா் திருமதி சி.பாக்கிய செல்வரதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனா். கவிஞா் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன், எழுத்தாளா் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு, நவீன் இளங்கோவன் உட்பட எழுத்தாளர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று மாணவா்களுக்குப் பயிற்சியை வழங்குகின்றனர்.

இரண்டாம் நாள் மாலையில் நடைபெறும் நிறைவு விழாவில் கல்லூரி இணைமுதல்வா் முனைவா் இராஜேந்திரன் பங்கேற்பாளா்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி, நிறைவுரையாற்றுகிறார். நிறைவில் இப்பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவா் ஜா.சலேத் நன்றியுரையாற்றுகிறார். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த 40 கல்லூரி மாணவர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியில் முழுமையாகப் பங்கேற்று எழுத்தாளராக, மாணவப் பத்திரிகையாளராக மாற விரும்பும் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை வழியாக 63814 93915 என்கிற வாட்ஸ்அப் எண்ணைத் தொடா்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்.
பதிவு செய்ய இறுதி நாள் 13.12.2022.