
திருச்சியில் புதிய பா.ஜ.க. அலுவலக திறப்பு விழா!
திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க புதிய கட்சி அலுவலகத்தை பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் திறந்துவைத்தார்.

திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய தலைவர் குமரன் , குண்டூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பூமாதேவி, செந்தில் மற்றும் குண்டுர் ஊராட்சி மணிமொழி, சிவகுமார் ஆகியோர் மாற்று கட்சியில் இருந்து விலகி தன்னை மாவட்ட தலைவர் ராஜசேகரன் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைத்து கொண்டனர்.
பா. ஜ. க மாவட்ட பொதுசெயலாளர்கள் பொன். தண்டபாணி காளீஸ்வரன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் இந்திரன் மாவட்ட செயலாளர்கள் ஜெயந்தி வெங்கட்ராமன், மாவட்ட துணை தலைவர் சந்துரு, திருவெறும்பூர் நகர் மண்டல் தலைவர் பாண்டியன், ஒன்றிய நிர்வாகிகள் குண்டூர் சுந்தர், முத்துகுமார், பாலமுருகன், ஹரிபாஸ்கர், ஆனந்த் பாலசுப்ரமணியன், கனகராஜ், சூரியூர் பெரியசாமி, சூரியூர் பாலு, பூலாங்குடி கனகராஜ், கும்பக்குடி அன்னலெட்சுமி, மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
