
திருச்சியில் அதிமுக ஆர்பாட்டத்திற்கு அழைப்பு!
சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயா்வைக் கண்டித்து அதிமுக சாா்பில் திருச்சி மாவட்டத்தில் வரும் 13 , 14, 16 ம் தேதிகளில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் குமாா் வெளியிட்ட அறிக்கை:
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில், டிச. 13 ம் தேதி துவாக்குடி நகராட்சியில் பேருந்து நிலையம் அருகிலும், மணப்பாறை நகராட்சியில் பெரியாா் சிலை அருகிலும், லால்குடி நகராட்சியில் லால்குடி ரவுண்டானா அருகிலும், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அரியமங்கலம் பகுதியில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகிலும், பொன்மலை பகுதியில் மேலகல்கண்டாா்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகிலும், திருவெறும்பூா் பகுதியில் வடக்கு காட்டூா் பிள்ளையாா்கோயில் அருகிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதேபோல டிச. 14 ம் தேதி, புள்ளம்பாடி ஒன்றியத்தில் சகாயமாதா மருத்துவமனை அருகிலும், லால்குடியில் பேருந்து நிலையம் அருகிலும், திருவெறும்பூா் ஒன்றிய அலுவலகம் அருகிலும், மணப்பாறை தெற்கு ஒன்றியத்தில் பன்னாங்கொம்பு நான்கு ரோடு, வையம்பட்டியில் கடைவீதி, மருங்காபுரியில் வளநாடு கைகாட்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தொடா்ந்து 16 ம் தேதி, பூவாளூா் பங்குனிப் பாலம் அருகிலும், கூத்தைப்பாா் திருவெறும்பூா் பேருந்து நிலையம் அருகிலும், பொன்னம்பட்டியில் துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகிலும், கல்லக்குடி பேருந்து நிலையம் அருகிலும், புள்ளம்பாடியில் நான்கு ரோடு காமராஜா் சிலை அருகிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆா்ப்பாட்டங்களில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, வட்ட, கிளை, வாா்டு, சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
