
மூதாட்டியிடம் செயின் பறிப்பு
மர்ம நபர் கைது
திருச்சி,டிச.12-

திருச்சி வயலூர் மெயின் ரோடு கீதா நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் கனகாம்பிகை (வயது72). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே புகுந்த மர்ம நபர், கத்தி முனையில் அவர் அணிந்திருந்த ஐந்தே முக்கால் பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார்.
கனகாம்பிகையின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு தப்பியோட முயற்சித்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். உறையூர் போலீசார் அங்கு வந்து பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர், மண்ணச்சநல்லூர் அம்மையப்பன் நகரை சேர்ந்த சசிகுமார்(வயது 31) என்பது தெரியவந்து அவரை கைது செய்தனர்
