
தூய்மைக்கு ஏங்கும் தூய்மை பணியாளர்கள்..
திருச்சி,டிச.12-

திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியில் தூய்மை பணியாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஓராண்டுக்கு முன் புதைவடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை மாநகராட்சி சரி செய்யவில்லை. இதனால் மழைநீா் சாலைகளில் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடா்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை.
இதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கணேசபுரத்தில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.
பகுதிச் செயலா் விஜயேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தகவலறிந்து வந்த மாநகராட்சி உதவி ஆணையா் தயாநிதி தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் கோரிக்கை நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
