
டீசல் திருடன் கைது
திருச்சி,டிச.12-

மணப்பாறை, கே. பெரியபட்டி கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் ரவிச்சந்திரன். லாரி உரிமையாளர்.
கடந்த 20.10.2022 ம் தேதி கரையான் பட்டியில் ஹோட்டல் அருகே லாரியை நிறுத்தி இருந்தபோது மர்ம நபர்கள் லாரியில் இருந்த டீசலை திருடி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி,
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் ராமமூர்த்தி (29 ) என்பவரை கைது செய்தனர்.
