
மாணவ, மாணவிகளுக்கு திருச்சி கலெக்டர் வாழ்த்து!
மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்
திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், டாலர்ஸ் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒர்த் தொழிற்பயிற்சி நிலையம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
