NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

இந்தியாவில் நாணயங்களின் வரலாறு – சிறப்பு தொகுப்பு !

0
1

சுதந்திர இந்திய நாணயங்கள் சிறப்பு சொற்பொழிவு

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து சுதந்திர இந்திய நாணயங்கள் குறித்த சிறப்பு சொற்பொழிவினை நூலகத்தில் நடத்தியது. நூலகர் புகழேந்தி வரவேற்றார். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் சேகரிப்பாளர் அப்துல் அஜீஸ் சுதந்திர இந்திய நாணயங்களை காட்சிப்படுத்தி பேசுகையில்,

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் பிரித்தானிய அரசின் நாணய அமைப்பும் நாணயங்களும் இந்தியா குடியரசான 1950 ஆம் ஆண்டுவரை புழக்கத்தில் இருந்தன.இந்திய குடியரசு முதலில் ரூபாய் நாணயங்களை 1950ல் வெளியிட்டது. பிற துணை அலகு நாணயங்களான 1/2 ரூபாய், 1/4 ரூபாய், 2 அணா, 1 அணா, 1/2 அணா & 1 தம்பிடி நாணயங்களும் தயாரிக்கப்பட்டன. ஒரு ரூபாயானது 16 அணாக்கள் அல்லது 64 தம்பிடிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு அணா, 4 தம்பிடிகளுக்கு இணையாக இருந்தது.

1957 இல், இந்தியா தசம முறையிலான நாணய முறைக்கு மாறியதென்றாலும் சிறிது காலத்திற்கு இருவகையான நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன. பழைய மற்றும் புதிய பைசா நாணயங்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை அறிய வசதியாக, 1957 முதல் 1964 வரை உருவாக்கப்பட்ட நாணயங்கள் “நயா பைசா” (“new” paisa) என்ற பெயரைக் கொண்டிருந்தன. புதியதாக புழக்கத்தில் விடப்பட்ட நாணயங்களாக 1, 2, 3, 5, 10, 20, 25, 50 (நயா) பைசா மற்றும் ஒரு ரூபாய் ஆகியன இருந்தன. இதில் ஒரு ரூபாய் நாணயம் மட்டும் தசமமுறைக்கு மாறியதற்கு முன் இருந்த மதிப்பிலேயே இருந்த நாணயமாகும். அதேபோல தசம முறைக்கு மாறுவதற்கு முன் வழக்கில் இருந்த அரை ரூபாய், கால் ருபாய் நாணயங்களும் புழக்கத்தில் நீடித்தன.

4

1964 இல் “நயா” என்ற சொல் கைவிடப்பட்டது. இந்த ஆண்டில் ஒரு புதிய வகுப்பாக 3பைசா அறிமுகப்படுத்தப்பட்டது, 1968 ஆம் ஆண்டு 20 பைசா நாணயம் அச்சிடப்பட்டது. 1, 2. 3 பைசா நாணயங்கள் 1970களில் படிப்படியாக புழக்கத்திலிருந்து வெளியேறின.1982 ஆம் ஆண்டு இரண்டு ரூபாய் நோட்டுக்கு பதிலாக இரண்டு ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டன.இரண்டு ரூபாய் நாணயமானது 1990 வரை மீண்டும் அச்சிடப்படவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ரூபாய் நாணயங்கள் அச்சிடப்பட்டன.

3

10, 25 மற்றும் 50 பைசா மதிப்பிலான துருவேறா எஃகு நாணயங்கள் 1988 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன, 1992 இல் புதிய ரூபாய் நாணயம் தயாரிக்கப்பட்டது. இந்த நாணயங்கள் பழைய ரூபாய் நாணயங்களை விட சிறியதாகவும், இலகுவானதாகவும் துருவேறா எஃகினால் செய்யப்பட்டிருந்தது.  1992 இல் 5 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 இல் 10 ரூபாய் நாணயம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில்லறை தட்டுப்பாடு மற்றும் 2, 5, 10 ரூபாய் பணத்தாள்களை அச்சிட ஆகும் மிகுதியான செலவின் காரணமாக இந்த உயர் மதிப்பு நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2011 ஆம் ஆண்டு சூன் 30 ஆம் நாள் 25 பைசா மற்றும் அதைவிட மதிப்பு குறைந்த அனைத்து நாணயங்களும் உத்தியோகபூர்வமாக செல்லாதவை ஆக்கப்பட்டன. சிறப்பு நிகழ்வுகள் அல்லது நபர்களின் நினைவார்த்த நாணயங்கள் அச்சிடப்பட்டன, நினைவு நாணயங்கள் நாணய சேகரிப்பாளர்களின் சேகரிப்புக்கும், புழக்கத்திற்கும் பயன்படுத்தப்படுவதாக இருந்தன. அவை பல்வேறு நாணய அலகுகளில் வெளியிடப்பட்டன. சில நினைவு நாணயங்கள் பின்வருமாறு மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, அம்பேத்கர், ராஜீவ் காந்தி, ஞானேஷ்வர், 1982–ஆசிய விளையாட்டுப் போட்டிகள், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ், அரவிந்தர், சித்தரஞ்சன் தாஸ், சத்ரபதி சிவாஜி மற்றும் 2010-பொதுநலவாய விளையாட்டுக்கள், சின்னம், பகத்சிங், இரவீந்திரநாத் தாகூர் போன்ற நினைவு நாணயங்கள் அச்சிடப்பட்டன என்றார்.

நாணயங்கள் பணத்தாள்கள் சேகரிப்பாளர்கள் முகமது சுபேர் லட்சுமி நாராயணன் சந்திரசேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் நிறைவாக செயலர் குணசேகரன் நன்றி கூறினார்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.