
பால் விநியோக குளறுபடி
எம்.எல்.ஏ ஆய்வு
திருச்சி,டிச.12-
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யப்படாமல் முன் பணம் செலுத்தி கார்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்க முடியும் எனக் கூறுவதாக புகார் எழுந்தது.
தகவல் அறிந்த

மணப்பாறை
எம்எல் ஏ அப்துல் சமது இக் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு
செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டுறவு சங்க செயலர் மற்றும் இணை பதிவாளர்களிடம் பேசிய எம். எல். ஏ .அப்துல் சமது , பொதுமக்களுக்கு சில்லறை விற்பனையில் தடையின்றி ரொக்கத்துக்கு பால் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து கூட்டுறவுச் சங்க பால் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள்,
பால் பேடா தயாரிக்கும் தொழிலாளர் ஆகியோரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
