NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி கலெக்டரிடம் குவிந்த கோரிக்கை மனுக்கள்!

0
1

திருச்சி கலெக்டரிடம்
குவிந்த கோரிக்கை மனுக்கள்!

திருச்சி கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விவசாய சங்கங்கள் தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டன.

இந்த மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் உரிய துறை நடவடிக்கைகளுக்கு பரிந்துரை செய்தார் அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்டோ ஓட்டுனர்கள் மனு

3

திருச்சி மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் ,ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில், காவேரி பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கடந்த இரண்டு மாத காலமாக வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

எனவே பழைய காவிரி பாலத்தை இருசக்கர வாகனங்களுக்கு திறப்பதாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வரும் நிலையில் அந்த பாலத்தில் ஆட்டோவுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.

4

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்டத் தலைவர் கோபி, செயலாளர் மணலி தாஸ் பொருளாளர் செல்வராஜ், ஜீவா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவில்,
வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை நிறுத்த வேண்டும்.
கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட
கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.

திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜ் மாவட்ட செயலாளர் விஷ்ணுவரதன், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் பலர் கலந்து கொண்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.