
திருச்சி செம்பட்டு புனித அமல் அன்னை ஆலய பெருவிழா
திருச்சி,டிச.12-

திருச்சி செம்பட்டு புனித அமல அன்னை ஆலய பெருவிழா நடைபெற்றது.
கடந்த 3-ந்தேதி அன்னையின் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, அமல அன்னையின் நவநாள் திருப்பலி மற்றும் குணமளிக்கும் ஜெப வழிபாடு, நற்கருணை ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பங்கு இறைமக்கள் கலந்துகொண்டு அன்னையின் வழியாக இறைவனுக்கு நன்றி கூறி அவர்களின் குடும்பம் மற்றும் அனைவருக்காகவும் ஜெபித்தனர்.
தொடர்ந்து,
அன்னையின் அலங்கார தேர் பவனி, அன்னையின் பெருவிழா திருப்பலியும் நடைபெற்றது.
