
குடிநீர் வரல… காலிகுடங்களுடன் திடீர் மறியல்
திருச்சி தென்னூர் குத்பிஷா நகர், காவல் காரன் தெரு, வெள்ளாளர் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகசீரான குடிநீர் வினியோகம் இல்லை.
அதேபோல குடிநீரில் கழிவு நீரும் கலந்து வந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சியில் புகார் தெரிவித்து நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்கள் காலி குடங்களுடன் தென்னூர் பள்ளிவாசல் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
தில்லைநகர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து உரிய பிரச்னைகளை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
