
கொடுக்கல் -வாங்கல் தகராறு
திருச்சி,டிச.12-
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் காயமடைந்தார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

துறையூர் சங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கம்மாள்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
வந்துள்ளது இந்நிலையில் கொடுத்த பணத்தை தங்கம்மாள் திருப்பி கேட்டார்.
சரவணன் பணம் தர முடியாது என தகாத வார்த்தைகளால் தங்கம்மாளை திட்டினார். சரவணன், ருக்மணி, பூங்கொடி, பாப்பா ,ஆகிய நால்வரும் சேர்ந்து தங்கம்மாளை தாக்கினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் துறையூர் போலீசார் விசாரணை நடத்தி நான்கு பேர் மீதும் வழக்கு பதிந்தனர்.
