
திருச்சியில் வி.சி.க.யினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

டாக்டர் அம்பேத்கர் உருவப்படம் அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட செயலாளர் அருள் தலைமை வகித்தார். விடுதலை தொழிலாளர் முன்னணி மாநில துணைச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன், மாவட்ட நிர்வாகிகள் கனியமுதன், சந்தன் மொழி, புல்லட் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
