
பணம் வைத்து சீட்டாட்டம் 3 பேர் -கைது
தாயனூர் மார்க்கெட் அருகே பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக சோமரசம்பேட்டை காவல் நிலைய துணை ஆய்வாளர் துளசிக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நவலூர்குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த குமரவேல், ரவி மற்றும் அல்லித்துறை சேர்ந்த சக்திவேல் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து விளையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட சீட்டுக்கட்டுகள் ,ரொக்கம் 600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
