
நடிகர் விஷால் திருச்சி வருகை!
ராணா புரொடக்ஷன் தயாரிப்பில் ,விஷால் நடிப்பில்’லத்தி’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சுனைனா நடிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபு நடித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படத்தின் டீசர் பலரது கவனத்தை ஈர்த்து
வருகிறது.
இந்நிலையில் ‘லத்தி’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் பிரமோஷனுக்காக திருச்சி எல். ஏ .சினிமா திரையரங்கிற்கு நடிகர் விஷால் மற்றும் அவரது படக்குழுவினர் வருகை தந்தனர். அப்போது விஷால் ரசிகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
