
திருச்சியில் வெவ்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கண்டித்து அதிமுக சார்பில் திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மணப்பாறையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி தெற்கு புறநகர் மாவட்ட செயலாளர் பா. குமார், தலைமை வகித்தார். அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
முசிறி
திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முசிறி நகர செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் அமைச்சர் அண்ணாவி மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றியச் செயலாளர் எம். கே. ராஜமாணிக்கம் ஜெயம் ,முன்னாள் பேரூராட்சி தலைவர் ஸ்வீட் ராஜா, முன்னாள் தொட்டியம் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், முக்கிய நிர்வாகிகள் ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர். நகர பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார்.
மலைக்கோட்டை
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பில் திருச்சி அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட அவை தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் மற்றும் மாணவரணி மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் சகாதேவ பாண்டியன், கவுன்சிலர் அரவிந்த், அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
உறையூர்
திருச்சி மாநகர் மாவட்ட உறையூர் பகுதி சார்பில் குறத்தெருவில் முன்னாள் எம்பி ரத்னவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பகுதி செயலாளர் பூபதி, முன்னாள் கவுன்சிலர் வனிதா, வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தில்லை நகர்
திருச்சி மாநகர் மாவட்டம் தில்லைநகர் பகுதி சார்பில் செயலாளர் முஸ்தபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் நல்லுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், மாவட்ட மீனவரணி செயலாளர் தென்னுார் அப்பாஸ்
மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
