
பா.ஜ.க வாக்கு சாவடி முகவர் கூட்டம்!
துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க திருச்சி மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமை வகித்தார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் ஆற்றல்மிகு வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது குறித்தும் வாக்கு சேகரிக்கும் முறைகள் குறித்தும் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன், வாக்குச்சாவடி முகவர்கள் இடையே உரையாற்றினார்.
துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.
