
சாலையில் மாடுகளை விட்டால் அபராதம்…
மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாடுகளை வளர்த்து வருபவர்கள், மாடுகளை கட்டுப்பாடு இன்றியும் பராமரிப்பு இன்றியும் தெருக்களில் திரிய விடுவதால் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும், பொது சுகாதாரத்திற்க்கும் இடையூறு ஏற்படுகிறது.

எனவே மாடுகளின் உரிமையாளர்கள் தாங்கள் வளர்த்து வரும் மாடுகளை தங்களுக்கு சொந்தமான இடத்தில் தொழுவம் அமைத்து அதில் மாடுகளை அடைத்து பராமரிக்க வேண்டும்.
தவறினால் தமிழ்நாடு மாவட்ட நகராட்சி சட்டம் பிரிவு 241ன் படி தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை பேரூராட்சி ஆட்களைக் கொண்டு பிடித்து பொது ஏலத்தில் விடவும், செலவை தங்களிடம் இருந்து வசூல் செய்திடவும், பொது சுகாதாரத்திற்கும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிப்பதாகவும் கருதப்பட்டு பொது சுகாதார சட்டம் மற்றும் நகராட்சி சட்ட விதிகளின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அபராதத்திற்கும், சிறை தண்டைனைக்கும் உள்ளாக்க நேரிடும். இத்தகவலை பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
