
திருச்சி அருகே இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
மணப்பாறை பேருந்து நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி புறநகா் மாவட்டத் தலைவா் ராஜா (எ) வீரசிவமணி தலைமை வகித்தாா். புறநகா் மாவட்ட இளைஞரணி செயலாளா் பெரியசாமி முன்னிலை வகித்தாா்.
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தொண்டர்கள் கோஷமிட்டனர்.
