
வெல்டிங் ஒர்க்ஷாப்பில் மர்ம நபர்கள் கைவரிசை!
வெல்டிங் ஒர்க்ஷாப்பில் இயந்திரங்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராம்ஜி நகர் அரியாவூரை சேர்ந்தவர் அழக.
ஒத்தக்கடை பகுதியில் ரங்கா ஸ்டீல் என்ற பெயரில் வெல்டிங் பட்டறை ஒர்க்ஷாப்ப நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று வந்து பார்த்த போது பட்டறையின் ஷட்டர் திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வெல்டிங் மிஷின், கட்டிங் மிஷின், ட்ரில்லிங் மெஷின், உள்ளிட்ட 30, 000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது.
இது குறித்து, அழகர் அளித்த புகாரின் பேரில் ராம்ஜி நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
