
திருச்சி அருகே பிரசவத்தின் போது தாயும் சேயும் பலியான சம்பவத்தால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் முசிறி நீலியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் மனைவி ஆர்த்தி.

இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆர்த்தி மீண்டும் கர்ப்பமடைந்து பிரசவத்திற்காக சோளம் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு செவிலியர், ஆர்த்திக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காலை 8. 30 மணி அளவில் குழந்தை இறந்தே பிறந்தது.
ஆர்த்திக்கு ரத்த போக்கு அதிகரித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே ஆர்த்தி இறந்தார். இதையடுத்து ஆர்த்தியின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து ஆர்த்தியின் கணவர் தர்மராஜ் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
