
திருச்சி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கலெக்டர் ஆய்வு!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர், மணப்பாறை வட்டம், வடுகப்பட்டி நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுவதையும் ஆய்வு செய்தார்.

பின்னர், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையகோட்டை ஊராட்சி ஒந்தாம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 18. 65 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை பள்ளி கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
