
திருச்சி மாணவி புதிய சாதனை!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகள், விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் கின்னஸ் சாதனையாளரும், திருச்சி கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவியுமான சாய்னா ஜெட்லி ,பெண்கள் பாதுகாப்பு எண் 181 மற்றும் அவசர அழைப்பு எண் 100, தாய் மொழியை போற்றும் வகையில் முதல் எழுத்தான அ. மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 இவற்றை ஒரு மணி நேரம்,தனது கட்டை விரலால் 7மீட்டர் அளவுக்கு ரேகை பதிவு வைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இவரது இந்த சாதனை ஜெட்லி புக் ஆப் ரெகார்ட்ஸ்,நேஷனல் ரெக்கார்ட்ஸ், ஆசிய பசிபிக் சாதனை புத்தகம் ஆகிய புத்தகங்களில் இடம் பெற உள்ளது.
இவர் ஏற்கனவே 20 முறை உலக சாதனைகள் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
