
திருச்சியில் 2 பேர் மாயம்!
மாணவி மாயம்

திருச்சி நவல்பட்டு சோழமாதேவி மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கஸ்பர்ராஜ் மகள் காருண்யா. திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்ற காருண்யா வீடு திரும்பவில்லை . நவல்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
டிரைவர் மாயம்
திருச்சி புத்துார் முத்துராஜா தெருவைச் சேர்ந்தவர் குமரன்(40). கார் டிரைவர். வீட்டை விட்டுச் சென்ற இவர் மாயமானார். பல இடங்களில் விசாரித்தும் இவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராமலட்சுமி அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து குமரனை தேடி வருகின்றனர்.
