
திருச்சி மாவட்டத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், மணிகண்டம் வடக்கு ஒன்றியம் மற்றும் மணிகண்டம் தெற்கு ஒன்றியம் சார்பாக ஶ்ரீரங்கம் தொகுதி அல்லிதுறை பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக மணிகண்டன் ஒன்றிய கழக செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும் , செயலாளருமான வளர்மதி, எம்ஜிஆர் அணி மாநில இணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கண்டன உரையாற்றினார்.

துறையூர் வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சேனை செல்வம் ,தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி ,மாவட்ட விவசாய அணி காமராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முசிறியில் வழக்குப்பதிவு

முசிறி கைகாட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முசிறி கைகாட்டியில் முசிறி நகரச் செயலாளர் எம் கே சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதை அடுத்து சட்ட விரோதமாக கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் செயல்பட்டதாக கூறி அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, பிரின்ஸ் தங்கவேல், அண்ணாவி, மல்லிகா சின்னசாமி ஒன்றிய செயலாளர் எம் கே ராஜமாணிக்கம் உள்ளிட்ட 70 நபர்கள் மீது முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துவாக்குடி
துவாக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாண்டியன் தலைமை வகித்தார்.
தா.பேட்டை
தா. பேட்டை ஒன்றியம் தும்பலம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயம் தலைமை வகித்தார் .
மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், தாபேட்டை நகரச் செயலாளர் சுப்ரமணியன், மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, யோகநாதன், முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் அண்ணாவி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு ஆகியோர் பேசினர்.
ஒன்றிய கவுன்சிலர் ராஜலட்சுமி, தமிழரசி, பூவான் , வான்மதி சக்திவேல், செந்தில்குமார், தங்கவேல் ராஜா சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . குமரவேல் நன்றி கூறினார்.
லால்குடி
லால்குடி சிவன் கோவில் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னி சேகர் தலைமை வகித்தார். லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன் , வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் முன்னிலை வகித்தனர்.
லால்குடி அதிமுக நகரக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
