
திருச்சி சிறை காவலர்களுக்கு உடையில் பொருத்தும் கேமரா
சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், கடலூர் , மற்றும் முக்கிய சிறைகளில், சிறைக் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும்பொழுது சிறை காவலர்கள் மற்றும் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்கவும் சிறை காவலர்கள் கண்காணிப்பு பணியை உயர் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் இருந்து நேரடியாக பார்வையிடுவதற்காகவும் சிறை காவலர்களுக்கு உடையில் பொருத்தும் வகையிலான கேமராக்கள் வழங்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் சென்னை சிறையில் தொடங்கப்பட்டது.
திருச்சி மத்திய சிறைக்கு முதல் கட்டமாக 5 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை சிறையில் மிக முக்கிய கைதிகளை அடைத்து வைக்கக்கூடிய உயர் பாதுகாப்பு பகுதியில் இருக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் சிறைக் காவலருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
