
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு!
மருங்காபுரி வட்டார வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. வேர்ல்ட் விஷன் இந்தியா அமைப்பின் திட்ட அலுவலர் செல்வின் தலைமை வகித்தார்.

குழந்தை பாதுகாப்பு நடவடிகைகள், வன்கொடுமை நடந்தால் எப்படி புகார் செய்வது, புகார் கொடுக்க வேண்டிய துறைகள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் என்ன என்பதை குறித்து மாவட்ட குழந்தை நலக்குழு அலுவலர் பிரபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு பணியாளர் கிருத்திகா, மாவட்ட சைல்டுலைன் அதிகாரி சுப்பிரமணி, முரளி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சித் தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு பள்ளித் தலைமையாசிரியர்கள், விஏஓக்கள், வார்டு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டென்னிஸ் ராஜ், ஜேம்ஸ் மற்றும் கிராம தன்னார்வலர்கள் செய்தனர்
