
துறையூர் உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு!

துறையூர் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆய்வு மேற்கொண்டார். துறையூர் உழவர் சந்தையின் செயல்பாடுகளை பார்வையிட்ட அவர், விவசாயிகள்,பொது மக்களிடம் கலந்துரையாடினார்.
உழவர் சந்தையில் விற்பனை செய்ய புதிதாக தேர்வு செய்யப்பட்ட உழவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன், ராஜேந்திரன் ,துணை இயக்குனர் சரவணன், வேளாண்மை அலுவலர் நந்தகுமார், துறையூர் வட்டாட்சியர் புஷ்பராணி, உட்பட பலர் கலந்து கொண்டனர். துறையூர் கோட்டப்பாளையம் முதல் பாலகிருஷ்ணம்பட்டி வரை அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வெங்கடாசலபுரம் கிராமத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார்.
