
ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணி உள்ளூர் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளர் வேலுச்சாமி மற்றும் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதில், திருச்சி பஞ்சப்பூர், ராமச்சந்திரா நகர், செட்டியபட்டி, எடமலைப்பட்டி புதூர், பிராட்டியூர், கிராப்பட்டி, காஜாமலை, சாத்தனூர் ஆகிய பகுதிகளில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பசியும் பட்டினியுமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. எனவே புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தில் திருச்சி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
மேலும் பஞ்சப்பூர் பகுதியில் விபத்தை தடுப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பாதுகாப்பு தடுப்பு வேலி அமைத்து விபத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்ட பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள பூங்காவை பராமரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பூங்காவை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு நிரந்தரம் ஆக்கிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
