
திருச்சி மலைக்கோட்டையில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி மட்டுவார் குழல் அம்மை திருக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.

இதையொட்டி பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.
சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனையுடன் மேளதாளங்கள் முழங்க பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஹரிஹரசுப்ரமணியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
