
தே.மு.தி.க.கொடியேற்று விழா

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு துறையூர் நீதிமன்ற நுழைவாயில் அருகில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை தலைமை வகித்தார். துறையூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
